பேரனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோவில் ரஜினி பயணித்தார்.

rajini

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று சென்னை திரும்பினார். இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மருமகன் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, தனது பேரன் வேத் விருப்பத்திற்கேற்ப தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ஆட்டோவில் ஆழ்வார்பேட்டைக்குப் பயணித்தார். தனுஷ் இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் இருந்த ரஜினிகாந்த் பிறகு மீண்டும் போயஸ் கார்டனுக்கு தனது காரில் சென்றார். அப்போது அவர் வீட்டின் முன் திரண்டு இருந்த ரசிகர்களுக்கு கை குலுக்கியபடியே வீட்டிற்குள் சென்றார்.