ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு: இயக்குனர் மகேந்திரன் பங்கேற்பு

சென்னை,

ஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில்  தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் மகேந்திரன், கலைஞானம் போன்றோர் கலந்துகொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுடனான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் இன்று  5 மாவட்ட ரசிகர்களை  ரஜினி சந்திக்கிறார். இதையடுத்து, அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குவிந்தனர்.

ரஜினியை சந்திக்க 1000 ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்துள்ளனர் அவர்களிடம் கடும் சோதனை நடத்தப்பட்ட பின்னரே ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒக்கி புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து,  ரஜினியை பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் கலைஞானம் ரசிகர்களிடையே பேசினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் மகேந்திரனும் பேசினார்.

மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் உள்ளனர்.