மறைந்த அம்பரீஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், ரஜினிக்கு நெருங்கிய நண்பர் ஆவார். முன்பு காங்கிரஸில் இருந்த அம்பரீஷ் பின்பு ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பின்னர், மீண்டும் காங்கிரஸில் இணைந்த அம்பரீஷ் கேபினர் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

rajini

இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் நேற்றிரவு காலமானார். அவரின் மறைவு குறித்து தகவல் அறிந்த தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தனது நண்பரான அம்பரீஷ் மறைவிற்கு டிவிட்டரில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் மட்டுமின்றி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா உள்ளிட்டோரும் நேரில் சென்று அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அனைவரின் அஞ்சலிக்கு பிறகு அம்பரீஷ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.