நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு!

சென்னை,

டிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

தமிழக சூப்பர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினி திடீரென ரசிகர் மன்ற நிர்வாகி களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஷியாக இருந்ததால் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்காமல் இருந்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென மாநில, மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் வரவழைத்து அவர்களுடன்  ரஜினி ஆலோசனை நடத்தினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமாக  ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது பல விஷயங்களை மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி விவாதித்தாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி