பெண் காவலருக்கு நடிகர் ராஜ்கிரண் ராயல் சல்யூட்..

சாத்தன்குளம் தந்தை, மகன் போ லீசாரல் அடித்து துன்புறுத்தப் பட்டபோது அதை எதிர்த்து தட்டி கேட்ட பெண் காவலர் ரேவதி பற்றி நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


காவல்துறைக்கு இலக்கணமாக விளங்கும் தலைமை காவலர் ரேவதி பல சாத்தான்கள் சூழ இருந்தும் யாருக்கும் பயப்படாமல் அரசியல், அதிகாரம் போன்ற பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் உண்மையை ஓங்கி ஒலித்து சத்தியத்தை காத்த தேவதையே உனக்கு அடிக்கிறேன் ராயல் சல்யூட்.
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் கூறி உள்ளார்.