அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவிலிருந்து நடிகர் ரஞ்சித் விலகல்

சென்னை:

பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நடிகர் ரஞ்சித் விலகுவதாக அறிவித்துள்ளார்.


திமுக அணியில் பாமக சேரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக சேர்ந்தது. இது பல தரப்பிலும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.

அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மகளிர் அணி தலைவி சுந்தரவள்ளி, அக்கட்சியிலிருந்து விலகினார்.

முதல்வர் எடப்பாடி முதல் அமைச்சர்கள் வரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் புகார் கொடுத்த பாமக, அதிமுக கூட்டணியில் சேர்ந்தது, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் பாமக விளக்கி வருகிறது.
இந்நிலையில், பாமக மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார். மது ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான பாமகவின் பேராட்டத்தால் கவரப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவிலிருந்து விலகிநடிகர் ரஞ்சித் பாமகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.  மக்களுக்கு செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். 4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு என்னால் வாழ முடியாது. யாரை எதிர்த்து போராடுகிறோமோ, அவர்களுக்கு விருந்து வைத்தது வேதனை அளிக்கிறது. விவசாயிகளை ஒரு நொடிப் பொழுதாவது பாமக எண்ணிப் பார்த்தா? என என ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.