கொரோனா வைரஸ் பரவல் பற்றி வதந்தி பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பலமுறை அறிவித்திருக்கிறது, இதனால் வதந்திகள் பரவுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சிலர் வதந்தியை பரப்புவதில் குறியாக இருக்கின்றனர்.
கோலிவுட்டில் ரஜினிக்கு தனிமரியாதை உண்டு பாலிவுட்டிலும் ரஜினிக்கு நல்ல மரியாதை உண்டு அமிதாப்பச்சன் முதல் ஷாருக்கான் வரை அவர் மீது தனிப்பிரியம் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தி படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வரும் ரோஹித் ராய், ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தனிமையில் இருப்பதாகவும்  டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட் மெண்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்,

கொரோனா லாக்டவுனில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன், ஜோக் சொல்கிறேன் என்று டிவிட்டரில் பார்டர் கட்டி வில்லங்க மெசேஜ் பகிர்ந்த ரோஹித், ரஜினிகாந்துக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் அவருக்கு கொரோனா பாசிடிவ் ஆகியிருப்பதாக அதில் கூறி உள்ளார். அத்துடன் கொரோனா விழிப்புணர்வுகள் சொல்லி அட்வைஸ் செய்திருக்கிறார்.
நடிகர் ரோஹித்தின் இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். உடனே அந்த மெசேஜை நீக்குங்கள், இவ்வாறு பொய் மெசெஜ் பதிவு செய்ய யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள், ரஜினி பற்றி வதந்தி பரப்பிய ரோஹித் மீது போலீசில் புகார் தரவுள்ளதாக மெசேஜில் தெரிவித்துள்ளனர்.