கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நேரத்தில் இருந்து பல முக்கிய சினிமா திரைப்பிரபலங்களின் மரணம் ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும் பிரபல எழுத்தாளருமான ரூபன் நேற்று உடல்நலகுறைவால் மரணமடைந்தார். அவரது வயது 54.

54 வயதாகும் ரூபன் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் எனவும் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

https://www.facebook.com/icanwin/posts/3238793259490410