பிரதமர்புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நடிகர் சல்மான் கான் தனது தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

salman

கடந்த 14ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு உலகநாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வீரர்களின் தியாகம் வீண் போகாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக கூறியுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில முதல்வர்கள் நிதி அறிவித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்பதாக அறிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த வரிசையில் தற்போது இந்தி நடிகர் சல்மான் கானும் இணைந்துள்ளார். தனது ‘பீயிங் ஹியூமன்’ என்ற அறக்கட்டளை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். சல்மான் கானின் இந்த முயற்சியை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூஜூ பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.