சென்னை,
டிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம். அதுகுறித்து எனக்கு தெரியாது என்றும்,  நடிகர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைத்து திட்டமிட்டு மோதலை தூண்டுகிறார்கள் என்று சரத் குற்றச்சாட்டி உள்ளார்.
நடிகர் சங்கத்தின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மோதலைத் தூண்டுவதாக இப்போதைய நிர்வாகிகள் மீது சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் தமிழக நடிகர் சங்க தலைவரும்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான  சரத்குமார் ஐதராபாத்தில் இருந்து இன்று  விமானம் முலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நடிகர் சங்க பிரச்சனையை சட்டபூர்வமாக சந்திக்க உள்ளேன். பொதுக்குழு லயோலா கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழுவில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் கிடையாது.
என் தற்காலிக நீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு 28ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருந்தது. பொதுக்குழுவை நல்லபடியாக நடத்த வேண்டும். லயோலா கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் நடிகர் சங்க வளாகத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
sarath1
பொதுக்குழு இடத்தை மாற்றியிருப்பதால் மீண்டும் நோட்டீஸ் தந்து இருக்கவேண்டும். இடம் மாற்றியிருப்பது பற்றி குறுஞ்செய்தியாகவோ தொலைபேசி வாயிலாகவோ சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. சொல்லி யிருந்தால்  அனைவரும் கலந்துகொண்டிருப்பர். தற்போது  அனைவரும் கலந்து‘கொண்டார்களா என தெரியாது. காரணம், இடம் மாற்றியது குறித்த தகவல்கள் கிடைக்காததால்,  வர நினைத்திருந்தவர்களும் வந்து இருக்க முடியாது என்பதால் அந்த கூட்டத்தை  பொதுக்குழுவாக எடுத்துக் கொள்ளமுடியாது.
நான் சங்க தலைவராக இருந்தபோது ஊழல் செய்துவிட்டதாக கூறினார்கள். அதன்பிறகு 150 கோடி ஊழல் என்றார்கள்.  பின்னர் 60 கோடி ஊழல் என கூறினார்கள். இப்போது 1.67 கோடி என கூறுகின்றனர்.
அவர்கள் என்னிடம் என்ன கேட்டார்களோ அதை எல்லாம் கொடுத்தாகி விட்டது. தற்போது  புதுசு புதுசா ஏதேதோ குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகின்றனர்.
நடிகர் சங்க தேர்தலில்  என்னைவிட  50-100 வாக்குவித்தயாசத்தில் வெற்றி பெற்றவர்கள்தான் என் மீது குற்றச் சாட்டு  வைத்து இருக்கிறார்கள். என்மீது ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்த வேண்டும் என்பதற்காகவே வேலை செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் தற்போது நடிகர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைத்து, ஒருவருக்கொருவரை பிரித்துவிட்டு சண்டை போடும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
நடிகர் சங்கத்தில்  அரசியல் கட்சிகள் தலையீட்டு இருக்கலாம். அது என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. நடிகர் சங்கத்தில் அடிதடி நடந்து உள்ளது என்றார்.
மேலும் கருணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து,  தனது மனைவி சொல்லி தான் எனக்கு தெரியும் என்றார்.
நான் தலைவராக, பொதுசெயலாளராக இருந்தபோது நடந்த பொதுக்குழு எந்த ஒரு அடிதடியுமின்றி சுமுகமாக நடைபெற்று  உள்ளது. தற்போது நடந்து உள்ள சம்பவங்கள் பற்றி பொதுக்குழு நடத்தியவர்களை தான் கேட்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.