கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளது. ஹர்பஜனுக்கும் சினிமாவுக் கும் என்ன சம்பந்தம் அவருக்கு எதற்கு சந்தானம் படக் குழுவினர் வாழ்த்து கூறுகிறார்கள் என்று சிலருக்கு சந்தேகம் எழும்.

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இதை யடுத்து படக்குழு அவருக்கு வாழ்த்து கூறி உள்ளது. சந்தானம் தனிப்பட்ட முறையிலும் தனது வாழ்த்தை ஹர்பஜனுக்கு தெரிவித்திருக்கிறார்.