ரஜினி ‘பேட்ட’ படத்தில் இணைந்த சசிகுமார்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சென்னை:

ன் மூவிஸ் தயாரிப்பில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் பேட்ட என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம், டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், ரஜினிஉடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் மற்றும் நடிகைகள் திரிஷா, சிம்ரன் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், பிரபல நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதை   படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.

சமீபத்தல் ரஜினி பேட்ட படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது சசிகுமாரும் அவருடன் இணைந்திருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி