காமெடி நடிகரின் ஸ்டண்ட் காட்சி.. கடைசியில் தெரிந்தது சஸ்பென்ஸ்..

விஜய், ஜீவா உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களுடன் காமெடி வேடங் களில் நடித்திருப்பவர் சதீஷ். இவர்ஜீவாவுடன் இணைந்து நடித்த கொரில்லா பட ஷூட்டிங்கின்போது எடுத்த ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் ஜீவா வாய்ஸ் கொடுக்க ’சதிஷை எப்படி கயிறுகட்டி மேலே இழுக்கிறார் கள் பாருங்கள்’ என்று கூற ஒரு கட்டி டத்தின் மேல் பகுதிக்கு ஒருவரை இழுக்கிறார்கள். வீடியோ கேமராவை வேறு பக்கம் திருப்பினால் அங்கு சதீஷ் நின்றுக் கொண்டு, ’ஆமாம், என்னை எப்படி இழுக்கிறாங்க பாருங்க எல்லாம் உங்களுக்காகத்தான்’ என சொல்லி விட்டு நழுவுகிறார்.
சதீஷ் நடிக்க வேண்டிய இந்த காட்சி யில் அவருக்கு பதிலாக ஸ்டண்ட் மேன் ஒருவர் சதீஷுக்கு டூப் போட்டு நடிப்ப தைத்தான் சதிஷ் வீடியோவாக பகிர்ந்தா ராம்.