திக பொருட் செலவு, அதிக வசூல் என்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பாகுபலி படத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. பண விவகாரத்தால் சொன்னபடி , தமிழகத்தில் முதல் நாள் திரையிட இயலாமல் போனது.

இன்னொருபுறம், எப்போதோ, (காவிரி விவகாரத்துக்காக) கன்னட மக்களை, “தனது பாணியில்” விமர்சித்திருந்த சத்யராஜை கண்டித்து, “அவர் நடித்த பாகுபலி படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம்” என்று கன்னட அமைப்புகள் சில போர்க்கொடி தூக்கின.

சத்யராஜ்.. “கட்டப்பா” வேடத்தில்..

பிறகு  நீட்டி முழக்கி, மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இதையடுத்து கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆனது.

ஆனால் இந்த விசயத்தில் சத்யராஜ் மீது, தமிழ் உணர்வாள்ரகள் பலருக்கும் வருத்தம் ஏற்பட்டது.

அவர்கள் சத்யராஜ் மீது வைத்த விமர்சனங்கள் இவைதான்:

“முன்பு குசேலன் படத்துக்காக ரஜினி.மன்னிப்பு கேட்டபோது ”
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்படுத்தி விட்டார்.
என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”.என்று இதே  சத்தியராஜ் சொன்னார். இப்போது இவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இவர் முன்பு அளித்த ஒரு பத்திரிகை பேட்டியில், “ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான்.

அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்!” – மார்க்கெட் இருந்தபோது நடிகர் சத்யராஜ் சொன்னது.

அதனால்தான், தொழிலுக்கு பாதிப்பு இல்லாத கர்நாடகாவை விமர்சித்தார். பின்னாட்களில் தான் பாகுபலி படத்தில் நடிக்கப்போவதும், அது கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆகும் என்பதும் தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்கமாட்டார்.

“தமிழ், தமிழ்” என்று முழங்கும் சத்யராஜின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுவிட்டது. திரைத்துறையைச் சேர்ந்த வ.கவுதமன் போன்றவர்கள், தமிழர் பிரச்சினைகளுக்காக சிறை சென்றிருக்கிறார்கள். நடிகர் லாரன்ஸ் எப்படிப்பட்டவரோ… ஆனால் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடியபோது நிதி உதவி செய்தார்.

ஆனால் சத்யராஜ் வாயாலேயே வடை சுடுகிறார். சிறை சென்றதும் இல்லை, நிதி அளித்ததும் இல்லை. இவரைத்தான் இதுவரை “தன்மானத் தமிழன்” என்ற அடைமொழியுடன் அழைத்தோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

கட்டப்பா சத்யராஜ், ஒரு எட்டபன்” – .

பாகுபலி படத்துக்காக கன்னட மக்களிடம் சத்யராஜ் மன்னிப்பு கேட்டபோது, இந்த கருத்துக்களைத்தான்  சமூகவலை தளங்களில் தமிழ் உணர்வாளர்கள் வைத்தார்கள்.

இந்த நிலையில்தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு தகவல் உலவுகிறது. அது இதுதான்:

“சத்யராஜ் பற்றி சமூகவலைதளங்களில் பதியப்பட்ட விமர்சனங்கள்  அவரை ரொம்பவே யோசிக்கவைத்தது. பாகுபலி படத்துக்காக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் அளித்தார்கள். அந்த பணத்தை தமிழ் அமைப்புகள், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் தமிழ் அறிஞர்கள், தமிழக அகதி முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் ஆகியோருக்கு அளிக்க சத்யராஜ் முடிவு செய்திருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்” என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது.

 

.