சத்யராஜ் மகள் புதிய இயக்கம் தொடங்க முடிவு..

பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சினிமாவுக்கு வராமல் தனக்கென ஒரு தனி வழி தேர்வு செய்திருக்கிறார். ஊட்டச்சத்து துறையில்‌ நிபுணராக தேர்ச்சி பெற்று பல்வேறு சேவை செய்து வருகிறார். அவரது சேவையை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ திவ்யா வுக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. இந்த விழா கோவிட்‌ 19 காரணமாக தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது.


இதுகுறித்துதிவ்யா வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக் கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமாரருக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.
நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்ப தைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌. ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர் களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌.
இவ்வாறு திவ்யா கூறி உள்ளார்.