புதிய படத்தில் செந்தில் கதாநாயகன் : ஆனால் ஜோடி கிடையாது…

 

நூற்றுக்கணக்கான சினிமாக்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.

‘ஒரு கிடாயின் கருனை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

ஆயுள் தண்டனை கைதியான செந்தில் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு, சொந்த கிராமத்துக்கு வருவதும், அங்கு நடைபெறும் சம்பவங்களும், தான் படத்தின் கதை.

செந்தில்

இந்த படத்தை சமீர் பரத் ராம் என்பவர் தயாரிக்கிறார்.

“செந்தில் அற்புதமான நடிகர். ஆனால் அவரது முழுத்திறமையை யாரும் பயன் படுத்தியதில்லை. இந்த படத்தில் செந்திலை முழுமையாக பயன்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார், சமீர்.

கதாநாயகனாக நடித்தாலும், செந்திலுக்கு இந்த படத்தில் ஜோடி கிடையாது என்பது சோகமான தகவல்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி அருப்புக்கோட்டையில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

– பா. பாரதி