மீண்டும் அதிமுகவில் நாளை இணைகிறார் நடிகர் செந்தில்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு

சென்னை: பிரபல காமெடி நடிகரான செந்தில் நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில். அதிமுகவில் இணைந்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது, அமமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளராகவும் செந்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நாளை அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், நடிகர் செந்தில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.