கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். அதன்பிறகு, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.