மது போதையில் கார் ஓட்டிய ‘பிக்பாஸ்’ சக்தி கைது

சென்னை

பிரபல திரைப்பட இயக்குனர் மகனும் நடிகருமான சக்தி மதுபோதையில் கார் ஓட்டி மற்றொரு காரை இடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரான பி வாசு பல புகழ்பெற்ற தமிழ் திரைப்படங்களை இயக்கி உள்ளார். வாசுவின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களி நடித்த்வர் ஆவார். இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துக் கொண்ட பிறகு மிகவும் புகழ் அடைந்தார்.

நடிகர் சக்தி நேற்று தனது நண்பரை காண தனது சொகுசுக் காரில் மற்றொரு நண்பருடன் சென்றுள்ளார். சூளை மேட்டில் ஒரு குறுகலான தெருவில் அந்த கார் செல்லும் போது முன்னே சென்ற காரை முந்த முற்பட்டதால் சக்தியின் கார் அந்தக் காரில் பலமாக மோதியது. அத்துடன் சக்தி வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இடிபட்ட காரின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார்.

பொதுமக்கள் சக்தியின் காரை ம்டக்கி பிடித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்து வந்த அதிகாரிகளின் விசாரணையில் சக்தி மது அருந்தி இருந்தது தெரிந்தது. அதை ஒட்டி அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மது அருந்தி இருந்தது உறுதி செய்யபட்டது. அதை ஒட்டி அவரைக் கைது செய்து அவரது கார் சாவி மற்றும் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

நடிகர் சக்தி தனது சொந்த ஜாமீனில் வெளி வந்துள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சக்தி அபராதத்தை செலுத்தினால் காரை திரும்ப பெற முடியும் என கூறப்படுகிறது. ஆயினும் மது போதையில் கார் ஓட்டியதால் அவர் ஓட்டுனர் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.