நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது.. பணம் வைத்து சூதாட்டம்..

--

ய் நீ ரொம்ப அழகா இருக்கே, 12 பி, லேசா லேசா, இயற்கை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ஷாம். தற்போது காவியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


நடிகர் ஷம் வீடு சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. அங்கு பணம் வைத்து சூதாடுவதாக தகவல் வந்ததையடுத்து நேற்று இரவு போலீஸார் தசோதனை நடத்தினர். அப்போது ஷாம் உள்ளிட்ட 13 பேர் சீட்டு விளையாடி யதாக கைது செய்யப்பட்டனர். பணம், சீட்டுகட்டு. டோக்கன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஷாம் தந்து வீட்டில் தொழில் அதிபர்கள். சில நடிகர்களும் அவ்வபோது வந்து சூதாடுவார்காள் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரத்து வருகின்றனர்.