Random image

ஜூலை 13 அன்று வெளியாகிறது சிவா நடித்துள்ள ‘தமிழ்ப் படம் 2’

டிகர் சிவா நடித்துள்ள  ‘தமிழ்ப் படம் 2:’ வரும் 13ந்தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சில வருடங்களுக்கு முன் தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன்.அதன் இரண்டாம் பாகமாக ஏற்கனவே நடித்த நடிகர் ‘மிர்ச்சி’ சிவா வைத்தே இயக்கி வந்தார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் 1ந்தேதி வெளியான நிலையில் தற்போது படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் சிவாக்கு  ஜோடியாக, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே  ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை – என். கண்ணன்.

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மேற்கொண்ட தா்மயுத்தத்தை கலாய்த்து தமிழ்படம்2 தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே தவல்கள் வெளியாகி இருந்தது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது. அந்த பயங்கரமான விஷயத்துக்கு காத்திருங்கள்’ என்று இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ள நிலையில, அன்று   ‘தமிழ்ப்படம்-2’ படம் வெளியாகிறது என்பதை உறுதி செய்துள்ளனர்.