தேர்தலுக்காக பட்டேலின் மதிப்பைக் குறைத்துவிட்டார் மோடி!: நடிகர் சித்தார்த் ட்விட்  

தேர்தலுக்காக  சர்தார் வல்லபாய் பட்டேலின் மதிப்பை பிரதமர் மோட குறைத்துவிட்டதாக நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் வதோதரா அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.  வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அந்த  சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.

இந்நிலையில்,  இது குறித்து நடிகர்  சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் சித்தார்த் தெரிவித்துள்ளதாவது:

“மிகவும் வீணாகவும், மரியாதை குறைவாகவும் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் இன்று குஜராத்தில் கொண்டாடப்படுகிறார். சர்தார் வல்லபாய் பட்டேல் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுபவராக பாஜகவினரால் தகுதி குறைக்கப்பட்டிருக்கிறார். 3000 கோடி ரூபாய் செலவில் மோடி இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார்கள்…….

சர்தார் வல்லபாய் பட்டேல் இன்று உயிரோடு இருந்திருந்தால்,  இவ்வளவு அதிக செலவில் தனக்கு சிலை வைப்பதற்கு  சம்மதித்திருக்க மாட்டார். அவரைப்பற்றி இவர்களுக்கு போதுமான அளவு தெரியவில்லை.

மக்களே.. கேள்விகள் கேட்பதை நிறுத்தாதீர்கள். நாம் வரி செலுத்துபவர்கள். இது நம்முடைய உரிமை” என்று சித்தார்த் அந்த பதிவில் கருத்திட்டுள்ளார்.