சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம்.. லண்டன் பெண்ணை மணக்கிறார்?

டந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே நடிப்பிலிருந்து விலகி இருந்த சிம்பு உடல் எடை குறைத்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளும் வகையில் தினமும் ஜாகிங் மற்றும் உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சிம்பு.

கவுதம் மேனன் இயக்கும் ’விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஒகே சொல்லி இருக்கிறார் சிம்பு அதற்கு அச்சாரமாக ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்தார். அப்படம் நெட்டில் வெளியாகி பேசப் பட்டது. மீண்டும் சினிமா படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கொடுத்தவுடன் ’மாநாடு’ படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். லண்டனை சேர்ந்த பெண்னை அவருக்கு மணம் முடிக்க பேசிருக்கிறார்களாம். இந்த ஆண்டில் சிம்புவுக்கு திருமணம் நடத்த குடும்பத் தினர் எண்ணி உள்ளனர்.