சிம்புவை இயக்கும் வெண்ணிலா கபடி குழு இயக்குனர்..

டிகர் சிம்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹன்சிகாவுடன் ‘மஹா’ மற்றும் வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’ படங்களில் நடிக்கிறார்.


இந்நிலையில் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிம்பு சம்மத்தித்திருக் கிறாரம். கிராம புற பின்னணியில் இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்படுகிறது.


ஏற்கனவே இயக்குனர் கவுதம் மேனன் இயக்க உள்ள விண்னை தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் படத் தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதற்கிடை யில் கொரோனா ஊரடங்கில் கவுதம் மேனன் இயக்கிய ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் திரிஷாவுடன் போனில் பேசுவதுபோல் நடித்தார். மேலும் மிஷ்கின், பத்ரி வெங்கடேஷ், மனோஜ் கே பாரதி இயக்கும் ‘சிகப்பு ரோஜக்கள் 2’ ஆகிய படங்களில் நடிக்க சிம்பு பேசி வருகிறார்.