சிம்புவின் விரக்தியும் – திருவண்ணாமலை சாமியாரும்..!

simbu-interview

அவரு மட்டும் இல்லைன்னா… நான் என்னாவாகியிருப்பேன் தெரியுமா? என்று சமீபத்தில் சிம்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார் சிம்பு. வாலு படத்தில் நடித்தாலும் நடித்தார் இவரின் 7 ஜென்ம சனியாக ஒட்டிக் கொண்டு பிரச்சனைகளும். அப்படி இப்படின்னு நாக்கு தள்ளி நுரை தப்பி வாலு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். இதற்கிடையில் ஹன்சிகா ஒரு பக்கம் பறந்து போக. சினிமா வாய்ப்புகள் மங்கிப் போக வாழ்க்கையை வெறுத்து சாமியார் ஆகிவிடலாம் என்று முடிவும் எடுத்திருந்தாராம்.

இதற்காக திருவண்ணாமலைக்கு சென்றிருந்த அவர் அங்கே ஒரு சாமியாரை சந்தித்து “சாமி வாழ்க்கையில பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டே இருக்கு, சமாளிக்க முடியல. நானும் சாமியார் ஆகிடலாம்னு முடிவு செய்திருக்கேன்னு சொன்னாராம்”. அதற்கு அந்த சாமியார் “இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கர்மா கொடுக்கப்பட்டுள்ளது. நான் சாமியார் ஆக வேண்டும் என்பது என்னுடைய கர்மா. நீ அப்படி இல்லை உன் கர்மா வேறு, ஏழைகளுக்கு உதவி செய், நல்லதையே யோசி என்று கூறி அனுப்பி வைத்தாராம்.

கார்ட்டூன் கேலரி