காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷூக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

மதுரை:

மீபத்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த்  பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஜனாதிபதி, முதல்வர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில், சதீஷ் சிவலிங்கத்தை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதுகுறித்து சதீஷ் சிவலிங்கம் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்,.

அதில்,  அருமையான மனிதரைச் சந்தித்தேன். என்னுடைய காமன்வெல்த் பதக்கத்துடன் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடைய கனிவான வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளன. அவருடைய கடுமையான உழைப்பிலான பணிகளை நான் வியந்துள்ளேன். கொண்டாடியுள்ளேன்.

சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு, உங்களுடைய அருமையான பரிசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.