பரோட்டா சூரியின் அம்மன் உணவக கிளைகள்: குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

மதுரை அவனியாபுரம் பகுதியில் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

பல தமிழ் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வருபவர் நடிகர் சூரி. கடந்த 2017ம் ஆண்டு மதுரை காமராஜர் சாலையில் அம்மன் உயர்தர சைவ உணவகத்தை திறந்து, தனது குடும்பத்தினர் மூலம் அதனை மேற்பார்வை செய்து வருகிறார். அம்மன் உணவகத்தின் சுவைமிகு உணவிற்கு மதுரை மக்கள் அமோக வரவேற்பும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது அம்மன் சைவ உணவகத்தின் கிளைகளை மாவட்டத்தில் பல பகுதிகளில் திறக்க திட்டமிட்டிருந்த நடிகர் சூரி, மதுரை அவனியாபுரம் – விமான நிலையம் பைபாஸ் சாலையில், “அம்மன் சைவ உணவகம்” மற்றும் ”அய்யன் அசைவ உணவகம்” ஆகியவற்றை திறக்க திட்டமிருந்தார். இதன் துவக்க விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், உணவகத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி, வியாபாரத்தை தொடங்கி வைத்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amman, food, hotel, Madurai, Parottaa Soori, sivakarthikeyan
-=-