‘வாயாடி பெத்த புள்ள’: 60லட்சம் பேர் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடல்

டிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் கனா திரைப்படத்தில், பட மேக்கிங் பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆனாதனா பாடியுள்ளார். இந்த  பாடலை யுடியூப் வலைதளத்தில்  இதுவரை  60லட்சம் பார்த்துள்ளனர்.

‘கனா’ படத்தில், சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ள `வாயாடி பெத்த புள்ள’ பாடலின் லிரிக்;ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா. அழகும், அழகிய குரலும் உடைய இந்த குழந்தை, தந்தையுடன் இணைந்து அழகாக பாடியுள்ளது. இந்த பாடலை  இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோரால்  ரசித்து பார்த்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கனா’. சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் அவரின் கனவான தேசிய மகளிர் கிரிகெட் அணியில் இடம்பிடிக்க எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார் என்பதை தரூபமாக இயக்கியிருக்கிறார்

சிவகார்த்திகேயனின் நண்பரும் பன்முக திறமை கொண்டவருமான அருண்ராஜா காமராஜ். படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மேக்கிங் வீடியோ பாடலை பாடியுள்ளார்.

`வாயாடி பெத்த புள்ள’ எனத் தொடங்கும் பாடலைத் தனது தந்தை மற்றும் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியுடன் சேர்ந்து ஆராதனாவும் பாடியுள்ளார். . தந்தை – மகள் இடையேயான அன்பை உணர்த்தும் பாடலாகவும், கதாநாயகியின் சிறிய வயது நிகழ்வு இந்த  பாடலைப் பாடும்போது ஆராதனா காட்டும் ரியாக்ஷன்கள், வார்த்தை உச்சரிப்பு, குரல்வளம் அனைத்தும் `கியூட்’ ஆக இருப்பதால், இப்பாடல் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

இதோ உங்களுக்காக அந்த மேக்கிங் வீடியோ ..

https://www.youtube.com/watch?v=00fWlZnZAo0&feature=youtu.be