சிவக்குமார் – செல்ஃபி : இன்னொரு சம்பவம்

ன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் ஆக்ரோசமாக தட்டிவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.

“செல்ஃபி எடுப்பது சிவக்குமாருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அது அந்த நபருக்குத் தெரியுமா? செல்பி எடுக்க வேண்டாம் என்று குணமா சொல்லியிருக்கலாமே. செல்பியை தட்டி விட்டு அது செயல்படாமல் போனால், அந்த நபர் திரும்பவும் வாங்க முடியுமா முடியாதா, எனறு கூட தெரியாமல் அவர் பொருட்களை தட்டிவிடுவதை ஏற்று கொள்ள முடியாது, மக்கள் அவரின் பிம்பத்தை ரசித்ததால் தான் அவர் குடும்பம் இன்றும் புகழுடன் இருக்கிறது, அதற்கு தகுந்த பரிசுதான் இது, அந்த புகழ் இல்லை என்றால் இந்த நிகழ்வு இருக்காது” என்று பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவத்தை சிவக்குமாரின் நண்பர்களில் ஒருவரான ஜெயராமன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு:

நான் திரு சிவகுமாருடன் 50 வருடங்களுக்கு மேலாக பழகிவருபவன். இது இரண்டு வருடங்களுக்கு முந்தய பதிவு:
.
அண்ணன் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியில் அவருடன் பேசிக்கொண்டே ஒரு செல்பி எடுக்க முயன்றேன். உடனே எனது மொபையில் போனை எனது கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிவிட்டார். “எவன்டா இந்த செல்பியை கண்டு பிடிச்சவன்? எனக்கு பிடிக்காத மேட்டர்களில் இந்த செல்பியும் ஒன்று, என்னோடு யாராவது செல்பி எடுத்தால் அந்த போனை பிடுங்கி தூர எறிந்து விடுவேன். போகட்டும் பிழைத்துப் போ” ” என்று கூறிவிட்டு அருகிலிருந்த அவரது கார் டிரைவர் கோபியிடம் எனது மொபையில் போனைக் கொடுத்து இந்த படத்தை எடுத்துக் கொடுத்தார்.எனக்கு உடனே செல்பி ஸ்பெசலிஸ்ட் நமது பிரதமர் மோடியின் நினைவு வந்தது. அப்படியும் ஒருவர். இப்படி ஒருவர்.