யாரையும் விமர்சிக்கும் தைரியசாலி சோ : சிவக்குமார்

ntlrg_20161207123158497193
நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி

நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியவர் சோ. இவர் சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் இன்று காலை 3.30 மணிக்கு உயிர் இழந்தார் இதனிடையில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியது :-

அரசியல் தலைவர்களிடம் நல்ல மதிப்பை பெற்றவர் சோ அவரை பற்றி ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். ஒருநாள் மழையில் நானும், அவரும் நின்றிருந்தோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், சார் நீங்களா! என்று கூறி காலில் விழுந்தார். உடனே சோவும் நீங்களா! என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். இவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பார் அப்படி அவர் விமர்சிப்பவர் எல்லோரும் அவரின் நெருங்கிய நண்பர்கள் தான் மிகவும் தைரியசாலி எந்த சூழலிலும் கண்ணீர் விட மாட்டார் என்று அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகுமார்.

Leave a Reply

Your email address will not be published.