கஜா புயல்: சிவக்குமார் மற்றும் சூர்யா குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி

--

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் குடும்பத்தார் சார்பில் ரூ.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளது.

surya

கடந்த வாரம் நாகை – வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ன.  லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், கட்டிடங்கள் பல சேதமடைந்தன. ஐம்பது பேருக்குமேல் பலியானார்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்தன.

பல கிராமங்களில் மக்கள் உணவு மற்றும் நீர் இல்லாமல் தவிக்கின்றனர்.  புயலினால் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களை மீட்க பல தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்த நிலையில்   நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தை சார்ந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.