கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் சினிமாவில் பணியாற்றும் தினசரி கூலி தொழிலாளர்களும், நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்னணி நடிகர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் சங்கங்களும் உதவி வருகிறது.

இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று வாழ்வை நகர்த்தி வருகிறார்.

மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.