சிவசேனாவின் மிரட்டலால் அதிர்ந்து போன நடிகர்….

சிவசேனாவின் மிரட்டலால் அதிர்ந்து போன நடிகர்….

சிவசேனா கட்சி எம்.பி.யின் மிரட்டலால்,அதிர்ந்து போன, பிரபல இந்தி நடிகர் சோனு சூட், மகாராஷ்டிர,முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபலமாக உள்ள  நடிகர்களில்  சோனு சூட்டும் ஒருவர்.. இவர் தனது, சொந்த  செலவில் சில பேருந்துகளை ஏற்பாடு செய்து மத்தியபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மும்பையில் தவித்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தார்.

அதனை கிண்டல் அடித்துள்ள சிவசேனா’’ சோனு திடீர் என ‘மகாத்மா’’ ஆக உருவெடுத்து விட்டார்’’ என தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சி பத்திரிகையில் சோனுவை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ள அந்த கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராத்’’ குறுகிய காலத்தில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது ‘’ என்று கேலி செய்துள்ளார்.‘’ ஒருநாள் பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’’ நிகழ்ச்சியில் சோனு சூட் பெயர் உச்சரிக்கப்படும். டெல்லி சென்று அவர் மோடியை சந்திப்பார். பின்னர் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. ‘ஸ்டார்’’ பேச்சாளராக சோனு அறிவிக்கப்படுவார்’’ என சிவசேனாவின் சஞ்சய் ,குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையை படித்த சோனு சூட் மிரண்டு போனார்.

’’அரசியல் வாதிகளிடம் வம்பு எதற்கு ?’ என நினைத்த சோனு சூட், முதல்வர் தாக்கரேயை சந்தித்து ’பேசியுள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை . தான் அனுப்பியது குறித்து சோனு விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.