யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார்! எச்.ராஜா கடுப்பு

சென்னை:

புதிய கல்விக்கொள்கை குறித்து யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா கடுமையாக சாடி உள்ளார்.

சமீபத்தில் புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கூறிய கருத்துகள் சர்ச்சை ஆனது.  அவரது கருத்துக்கள் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் சூர்யாவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தன. ஆனால், பாஜக மட்டுமே, சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக ஆதரவாளரான நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் கருத்தை வரவேற்று பேசியிருந்தார். அவர் பேசும்போது, சூர்யா கூறிய கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்றார்கள் ஆனால்,  சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

ரஜினியின் கருத்து, பாஜக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சர்ச்சை புகழ் தமிழக பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா, சூர்யாவை மீடு  கடுமையாக வசை பாடி உள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார்  என்று அவர்மீது குற்றம் சாட்டி உள்ளார்.