’தரம் தாழ்ந்தவர்களுக்கு எதிர்வினையாற்றாதீர்.. நடிகைக்கு சூர்யா மீண்டும் பதிலடி..

டிகர்கள் விஜய், சூர்யா பற்றி ’எட்டு தோட்டாக்கள்’ நடிகை மீரா மிதுன் சமீபத் தில் அவதூறான விமர்சனங்கள் செய்தார். இதற்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு கடுமையான பதிலடி தந்தனர். இந்நிலையில் மீண்டும் மீரா மிதுன்,’ எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு விஜய் சூர்யாதான் காரணம்’ என மெசேஜ் பதிவு செய்தார்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மிதுனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ’கண்ணியமாக வாழும் நடிகர்கள் விஜய், சூர்யா மீது அவதூறாக பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்’ என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் பாரதிராஜாவுக்கு நன்றி சொல்லி சூர்யா வெளியிட்டுள்ள மெசேஜில், ’எனது தம்பிகள், தங்கை களின் நேரமும் சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படவேண்டும் என்பதே என் விருப்பம்.
இயக்குனர் இமயம் திருமிகு பாரதிராஜா வுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்’ என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் சூர்யா வெளியிட்ட பதிவில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்’ என மறைமுகமாக தன் மீதான நடிகையின் அவதூறு கருத்துக்களுக்கு பதில் அளித்தி ருந்தார் சூர்யா. அதை இன்று மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக் கிறார்.