நடிகர் சூர்யா தவறாக பேச மாட்டார்! இயக்குநர் பாரதிராஜா

சென்னை: நடிகர் சூர்யா தவறாக  பேச மாட்டார், நடக்க மாட்டார்  என  இயக்குநர் பாரதிராஜா வக்காலத்து வாங்கியுள்ளார்.
நீட்தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுவது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக, நீதிபதிகளை கடுமையாக சாடியிருந்தார்.
இது நீதிமன்ற அவமதிப்பு, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகை யிலும் உள்ளதாகவும், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும்  என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் பாரதிராஜா வக்காலத்து வாங்கி உள்ளார். நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும்மாட்டார்  என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
மேலும்,  திரைப்படம் திரைக்கு போக வேண்டும் என்று தான் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று கூறியவர்,  படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய சங்கம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.