‘சந்திரமவுலி’ படத்தில் பாடகியாக அறிமுகமாகும் நடிகர் சூர்யாவின் சகோதரி பிருந்தா

சென்னை:

கார்த்திக், கெளதம் கார்த்திக் நடிப்பில் திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் பாடகியாக பிரபல நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் சகோதரி பிருந்தா அறிமுகமாகி உள்ளார். இந்த பாடலுக்கு  சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.

சிவகுமார் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனுக்காக ஏற்கனவே பாடல் பாடியுள்ள பிருந்தா, தற்போது முதன் முறையாக சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.

இதுகுறித்து பிருந்தா கூறும்போது, தனது பாடலை கேட்ட படத்தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது படத்தில் பாடலை பாட தனக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறினார்.

மேலும் தான் சிறுவயது முதலே கர்நாடக சங்கீதம் கற்று வருவதாகவும்,என் குரலின் அடிப்படையில்தான் நான் பாட விரும்புகிறேன் என்றும், யாருடைய செல்வாக்கினாலும் அல்ல என்று கூறினார்.

பிருந்தா சிவகுமார்

தனஞ்ஜெயன் சார் அளித்த வாய்ப்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது தற்போது சினிமாவில் பாடியுள்ளதன் காரணமாக தனது கனவு நனவாகியுள்ளது என்றும், மேலும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்க யோசிக்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

எனது குரல் மாதிரியை,   இசையமைப்பாளர் சாம் சிஎஸ் அனுப்பி வைக்க சொன்னார். நான் அனுப்பினேன். அது அவருக்கு பிடித்ததால் என்னை படத்தின் பாடலுக்கு பாட அழைத்தார் என்றும், அப்போது அவரிடம் நான் இது எனது முதல் பாடல் என்பதால் எளிமையாக டியூன் போடுங்கள் என்றேன்… அதுபோலவே அவர் எனக்கு உதவி புரிந்தார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், எனது பாடலை கேட்க அப்பா சிவகுமார் ஆசைப்படுவார் என்றும், சிறுவயதிலேயே என்னை தினமும் பாடச்சொல்லி அப்பா ரசிப்பார் என்றும் கூறினார்.

தனது குரலில் சினிமா பாடல் பாடியிருப்பது தனக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்றும், எனது பாடலை கேட்டு அண்ணன் சூர்யா ஆச்சரியப்பட்டார் என்ற பிருந்தா, கார்த்தி எனது பாடலுக்கு மிகப்பெரிய விமர்சகன் என்றும், எப்போதும் கிண்டல் அடிக்கும் கார்த்தி, இந்த பாடலை கேட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்தினார்.

இவ்வாறு பிருந்தா கூறினார்.