நடிகையிடம் விசாரிக்க வந்த போலீஸார் கொரோனா முகாமில் அடைப்பு..

--

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு பற்றி நடிகையிடம் விசாரிக்க வந்த போலீசார் கொரோனா முகாமில் அடைக்கப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:


சுஷாந்த் தற்கொலை பற்றி மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பீகாரில் பாட்னா போலீசில் சுஷாந்த்தின் தந்தை கேகே சிங் புதிய புகார் அளித்தர்.
அதில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது புகார் கூறி யிருப்பதுடன் அவர்தான் சுஷாந்த தற்கொ லைக்கு காரணம் என் குறிப்பிட்டுள்ளார். வழக்கை பாட்னா போலீஸார் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து ரியாவிடம் விசாரணை நடத்த பாட்னா (சென்ட்ரல்) எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று மும்பை வந்தடைந் தது. ஆனால் அவர்களை கொரோனா தடுப்பு பிரிவு மருத்துவ குழுவினர் அங்கே மடக்கி வலுக் கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்று அடைத்தனர். இதனால் அவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு விசாரணை மேற்கொள்ள முடியாதபடி சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு மகாராஷ்டிராவில் அமலில் இருக்கிறது. பிறமாநிலத்திலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்ப தால் பாட்னா போலீஸ் குழுவையும் தனிமைப் படுத்தி உள்ளார்களாம்.