ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ,மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மும்பை போலீஸ், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சுஷாந்த் வழக்கில் அவரது தந்தையின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வழக்கறிஞர் விகாஸ் சிங்’’ சுஷாந்த் வழக்கு திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.. இந்த விசாரணையின் போக்கே மாறி விட்டது. இந்த வழக்கு விசாரணை குறித்து சி.பி.ஐ. இதுவரை ஊடகங்களுக்கு ஒரு சின்ன தகவல் கூட சொல்லவில்லை’’’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மே.வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘’ அரசியல் தான் சுஷாந்தை கொன்று விட்டது’’ என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘’பீகார் தேர்தலில் வெற்றி பெற சுஷாந்த் மரணம் உதவும் என பா.ஜ.க..நினைத்தது.இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடத்திய விசாரணை பலன் அளிக்காத நிலையில், இப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு முடுக்கி விடப்பட்டுள்ளது’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘’இந்த விசாரணையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இதுவரை என்ன சாதித்துள்ளது? எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது? தீவிரவாதிகளின் தொடர்பு குறித்து கண்டறிந்துள்ளதா? குறைந்த பட்சம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழாவது யாரும் கைது செய்யப்பட்டுள்ளனரா?’’என ஆதிர் ரஞ்சன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி.