டந்த மாதம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவருக்கு வந்த பட வாய்ப்பு களை ஏற்க முடியாமல் செய்து அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர் மன அழுத்ததுக்கு செல்ல சஞ்சய் லீலா பன்சாலி அளித்த 4 பிரமாண்ட வாய்ப்புகளை ஏற்க விடாமல் நடந்த சதிதான் காரணம் என்பது அம்பலத் துக்கு வந்துள்ளது. குறிப்பாக பிரபல பட தயாரிப்பாளர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி சுஷாந்த்துக்கு அளித்த பட வாய்ப்பு கள் பற்றியும் அதனை ஏற்கமுடியாமல் அவர் கைநழுவவிட்டது பற்றியும் நேற்று மும்பை போலீஸ் முன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

பன்சாலி அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சுஷாந்த் சிங்கிற்கு பத்மாவத்,, கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கப் பட்டது. அவரால் மற்றொரு கம்பெனி ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த வாய்ப்பு களை ஏற்க முடியவில்லை.
கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் சுஷாந் திற்கு முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கப் பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன, ஷாஹித் கபூர் நடித்த பத்மாவத்தில். சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்க கேட்டபோதும் அவரால் ஏற்கமுடியவில்லை
இவ்வாறு பன்சாலி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோலியன் கி ராஸ்லீலா பாக்ஸ் ஆபிஸில் ரூ 220 கோடிக்கு மேல் வசூலித்தது. இது சுமார் 48 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்டது. பல்வேறு பாலிவுட் விருது விழாக்களில் 19 க்கும் மேற்பட்ட விருது களையும் பாராட்டுகளையும் வென்றது.
பாஜிராவ் மஸ்தானியும் ரூ .350 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. சுமார் 146 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக் கப்பட்டது. தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விழாவில் 62 விருதுகளை தட்டிவந்தன.
சுஷாந்த் சிங் வந்த பத்மாவத் படமும் நழுவிய நிலையில் அப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இது 215 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட்டில் படமாக்கப் பட்டு சுமார் 585 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த படம் 25 க்கும் மேற்பட்ட விருதுகள் வென்றது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் 2015 வரை யாஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்.ஆர்.எஃப்) 3 படங்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்தார். ஆனால் அந்த படம் எதுவும் எடுக்கப்படவில்லை. வேறு படங் களில் நடிக்கவும் நிறுவனம் அனுமதிக்க வில்லையாம். இதன் மூலம் சுஷாந்த்தின் வளர்ச்சி தடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. இதுவே சுஷாந்த்தின் மன அழுத்ததிற்கு காராணம் என்றும் கூறப்படுகிறது.