காதலியை தொடர்ந்து சுஷாந்த் சிங்கை நினைத்து தங்கை உருக்கம்..

டந்த மாதம் தற்கொலைசெய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஒரு மாதம் ஆகிறது. அவரை இழந்து வாடும் சகோதரி சுவேதா சிங் உருக்கமான மெசேஜ் பகிர்ந்திருகிறார். அதில்,“எங்களை விட்டு நீ பிரிந்து சென்று ஒரு மாதமாகிவிட்டது. ஆனால், உன் நினைவு எங்களை விட்டு அகலாது, இழந்த துக்கத்திலிருந்து எங்களால் மீள முடியாது, லவ் யூ அண்ணா. எப்போதும் நிர்ந்தர மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நம்புகிறேன் ” எனக் கூறி உள்ளார்.


முன்னதாக சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி நேற்று சுஷாந்த்தை நினைத்து கடிதம் வெளியிட்டிருந்தார். அதில், ’வாழ்நாள் முழுவதும் உன் நினைவு என்னை விட்டு பிரியாது’ என கூறியிருந்தார்.
சுஷாந்த இழந்த துக்கத்தில் ரசிகர்கள் இருந்தா லும் வரும் 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சுஷாந்த்த் நடித்த கடைசி படம் ’தில் பெச்சாரா’வின் வெளியாவதை பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக் கின்றனர்.