புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்….!

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி.

இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

கிடா மீசையில் பல படங்களில் அனைவரையும் மிரட்டி வந்த தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பற்று வந்த தவசிக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

நடிகர் சூரி 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.

மேலும் நடிகர் தவசியை தனது மருத்துவமனையில் தங்க வைத்து இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-வான சரவணன்.

மேலும், சிம்பு, ரோபோ ஷங்கர் என்று பலர் தவசியின் மருத்துவ செலவிற்கு நிதியுதவி அளித்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று வேண்டினர்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தவசி.