தனது சம்பளத்தில் 40% குறைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள மாநாடு நடிகர் உதயா….!

--

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது .

பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும்உதவிகள் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணும் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் நடித்துவரும் அக்னி நட்சத்திரம் மற்றும் மாநாடு ஆகிய படங்களுக்காக வாங்கும் சம்பளத்தில் விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

You may have missed