மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற நடிகர் வடிவேலு மகள் திருமணம்

முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம் இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர், திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘வைகைப் புயல்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு,  கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் அரசியல் களம் புகுந்ததால் சினிமா வாய்ப்பை இழந்தார்.

ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அரசியல் ஆசை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு எந்தவித அரசியல் நிகழ்வுகளில் பங்குகொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று வடிவேலுவின் மகளுக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது. வடிவேலுவின் மகள்  கலைவாணிக்கும், ஆர்.ராமலிங்கம் என்பவரும்   மதுரையில் N.S.நாடார் சந்திரஅம்மாள் திருமண மஹாலில்  இன்று காலை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமண தம்பதிகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள்,  திரையுலகை சேர்ந்தவர்கள், முன்னணி நடிகர் நடிகைகள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.