Random image

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா மறைவு

ழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சுப்பையா. நடிப்பார்வம்  காரணமாக சென்னை வந்த அவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் உட்பட  முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.

அவர் நடிக்க வந்த காலத்தில் சுப்பையா என்ற பெயரில் பலர் இருந்ததால் தனது பெயருடன் “வெள்ளை” என்பதை இணைத்துக்கொண்டார்.

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன்,  உள்பட முந்நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

“மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி” என்ற வைதேகி காத்திருந்தாள் படப்பாடலில் தனியாக ஆடி பாடி நடித்தவர் இவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார்

சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்ட அவர் அதற்காக கோவை மாவட்ட  ஆட்சியரிடம் சில வருடங்களுக்கு முன் மனு அளித்த சம்பவமும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். இறுதி  சடங்கு இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த வெள்ளை சுப்பையாவின் மனைவி பெயர், சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி. கணவருடன் குவைத்தில் வசித்துவருகிறார்.