மெர்சல் வெற்றிக்கு விஜய் நன்றி!!

சென்னை:

மெர்சல் படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்த மெர்சன் திரைப்படம் வெளியானது. திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் வெளியான பிறகும் ஜிஎஸ்டி பிரச்னையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றி என்று அதில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.