ஜனவரியில் தொடங்கும் விஜய் – அட்லி திரைப்படம்..!

vijay and atlee
Vijay and Atlee

இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் “தெறி”. இத்திரைப்படம் மக்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் அட்லிக்கு விஜய் மீண்டும் ஒரு படத்துக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இத்திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

தற்போது தான் விஜய் பைரவா திரைப்படத்தை நடித்து முடித்து கொடுத்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு ஒய்வு எடுத்துக்கொண்டு ஜனவரி 5ஆம் தேதி இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவிடம் அட்லி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றாராம், அது மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகைகளிடமும் பேசிக்கொண்டிருக்கின்றாராம் அட்லி..