காவேரி மருத்துவமனை வந்தார் நடிகர் விஜய்: கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

காவேரி மருத்துவமனை வந்த நடிகர் விஜய், கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் நலிவுற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி இரவு அவருக்கு திடீரென உடல்நலிவு அதிகமானது. . இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் காவேரி மருத்துவமனை வந்து வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.