டிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் இசைவெளியீடு அடுத்த மாதம் 20ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இசை ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே மிகவும் எதிர் பார்ப்பு நிலவி வரும் நிலையில், டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 20-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பாடல்கள் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

அன்றைய தினமே ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக,  சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.