பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி சுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பின்னணி பாடகர் உடல், அவரது பண்ணை வீடு அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர்கள், திரையுலக ஜாம்பவன்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இறுதி மரியாதை செய்தனர்.

அவரது உடலக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அங்கு  எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

காதலுக்கு மரியாதை, லவ் டுடே , யூத், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களில் எஸ்பிபி அவருக்காக பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.